Thursday, January 27, 2011

சித்தர்களின் பாடல்களை.....

அனைவருக்கும் அறிய ஒரு வாய்ப்பு ,

சித்தர்களின் பாடல்களை கீழ்காணும் இணையத்தளத்தில் காணலாம்.

http://www.tamilvu.org/library/l7100/html/l7100ind.htm

Monday, September 27, 2010

சிவவாக்கியரின் ஓம் நமச்சிவாயமே .....

சுக்கிலத் துளையிலே  சுரோணிதக் கருவுள்ளே
முச்சதுர வாசலில் முளைத்தெழுந்த மோட்டினில்    
மெய்ச்சதுர மெய்யுள்ளே விளங்கும்ஞான  தீபமா
யுச்சரிக்கு மந்திரம் ஓம்நம  சிவாயமே ..

சிவவாக்கியரின் பாடல்களில் சமுதாய நோக்கங்கள்

அனைவருக்கும் நன்றி,
என்னால் சிறிது காலம் சரியாக பாடல்கள் எழுத முடியவில்லை , மீண்டும்  ஆரம்பிக்க முயற்சிக்கிறேன் .

பறைச்சியாவ தேதடா பணத்தியாவ தேதடா
இறைச்சிதோ லேலும்பினு மிலக்கமிட்  டிருக்குதோ
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும்  பகுத்துபாரு மும்முளே.

Wednesday, September 1, 2010

சித்தன் தன்னை ஏன் சித்தன் என்று கூறுவதில்லை?

சித்தன் தன்னை ஏன் சித்தன் என்று கூறுவதில்லை ஏனெனில் சித்தத்தை உணரும்போது மௌனமாகிவிடுவர்கள் . ஈசன் என்ற நினைப்பில் தம்மை முழுமையும் அர்பணித்து விடுவார்கள். பஞ்ச  பூதங்களை உணரும்போது தான் தம்மையே உணரும் பாக்கியம் கிடைக்கும் , அவ்வாறு கிடைத்த சந்தோசத்தை யாருடன் பகிர்ந்துகொள்வான் ? 

Friday, August 27, 2010

பக்தன் என்பவன் யார் ? சித்தன் என்பவன் யார் ? மனிதன் என்பவன் யார் ?

மதிப்பிற்குரிய தத்துவ குரு முனுசாமி அவர்களின் விளக்கம்,
பக்தன் என்பவன் தன் உடல், பொருள் , ஆவி அனைத்தையும் ஒரு படைப்புக்காக (இறைவன், பெண், குடி, காதல்,தொழில்,.....) தம்மையே அர்ப்பணம் செய்து கொள்பவன்.

எ.கா
    செய்யும் தொழிலே தெய்வம் .

சித்தன் என்பவன் எந்தவொரு சடங்கு, சம்பிரதாயங்களுக்கு கட்டுப்பட்டவனாக இருக்கமாட்டான். முற்போக்கு சிந்தனை கொண்டவனாக இருப்பான். இயற்கையை நேசித்து அதனுடன் உறவாடி கொள்பவன். சாதி, மதம் பேதமின்றி அனைவரையும் ஒருமுகமாக பார்க்கும் குணம் கொண்டவனாக இருப்பான். தம்மையே ஈசனாக உருவகப்படுத்தி கொள்பவன்.

எ.கா
யாதும் ஊரே யாவரும் கேளிர்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் .
சித்தன் போக்கு சிவன் போக்கு.

மனிதன் என்பவன் மனதிற்கு கட்டுப்பட்டவன். தமது மனம் எதை நினைக்கிறதோ அதற்க்கு உடன் பட்டு நடப்பவன். சடங்கு,சம்பிரதாயங்களுக்கு உட்பட்டவன். சமுதாயத்தில் பின்னிப்ப்பினைக்கபட்டவன். தாம் உண்டு தம் வேலை உண்டு என்று உள்ளவன். 
எ.கா
    விதிப்படி பயணம்.
    நடப்பதெல்லாம் நன்மைக்கே.

Thursday, August 26, 2010

பத்திரகிரியாரின் தினம் ஒரு மெய்ஞானப்புலம்பல்-1

காப்பு
முத்திதரும்  ஞான மொழியாம் புலம்பல் சொல்ல
அத்தி முகவன்தன் அருள் பெறுவது எக்காலம் ?

பத்திரகிரியார் தான் பாட இருக்கும் புலம்பலுக்கு காப்புவாக விநாயகனை வேண்டி
கொள்வதாக பொருள் அமைந்துள்ளது. இப்பாடலில் முக்தி பெருவதர்ருக்கு வேண்டிய வழி முறைகளை அவர் புலம்பல் வழியாக மக்களுக்கு எடுத்து கூறுகிறார். இது தமிழ் மக்களின் நாடோடிப்பாடல் வகையை சேர்ந்தது.

பொருள்: அத்தி - யானை 
                 அத்தி முகவன் - விநாயகன்

Wednesday, August 25, 2010

சித்தர்களின் பாதங்களுக்கு என் பணிவான வணக்கம்

என் வலைப்பூவிற்கு வரும் அனைத்து சித்தர்களுக்கும் என் பணிவான வணக்கம், கடவுளை பூசிப்பவன் பக்தன் , சித்தர்களை பூசித்து அவர்கள் காட்டிய வழயில் நடப்பவன்  சித்தன் என்ற கோட்பாட்டுடன் நான் இந்த பகுதியை தொடர்கிறேன் .

சித்தர்களைப்பற்றி ஆய்வு செய்வதற்கு எனக்கு தகுதி இல்லை என்றாலும் ,அவர்களே துணை என்று கருதி சித்தர் பாடிய பாடல்களில் உள்ள மனித நேயத்தைப்பற்றி நான் கொள்ள இருக்கும் ஆய்வுக்கு அவர்களே  துணை என்று ஆரம்பிக்கின்றேன். என் வலைப்பூவில் என் வாழ்வில் நடந்த எதன்னியோ அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தவறு இருப்பின்  பெருந்தன்மையுடன் மன்னிக்கவும்.

இப்படிக்கு,
சித்தர்களின் தலைவனான ஆதி சித்தன் சிவன் அடிமை.