Friday, August 27, 2010

பக்தன் என்பவன் யார் ? சித்தன் என்பவன் யார் ? மனிதன் என்பவன் யார் ?

மதிப்பிற்குரிய தத்துவ குரு முனுசாமி அவர்களின் விளக்கம்,
பக்தன் என்பவன் தன் உடல், பொருள் , ஆவி அனைத்தையும் ஒரு படைப்புக்காக (இறைவன், பெண், குடி, காதல்,தொழில்,.....) தம்மையே அர்ப்பணம் செய்து கொள்பவன்.

எ.கா
    செய்யும் தொழிலே தெய்வம் .

சித்தன் என்பவன் எந்தவொரு சடங்கு, சம்பிரதாயங்களுக்கு கட்டுப்பட்டவனாக இருக்கமாட்டான். முற்போக்கு சிந்தனை கொண்டவனாக இருப்பான். இயற்கையை நேசித்து அதனுடன் உறவாடி கொள்பவன். சாதி, மதம் பேதமின்றி அனைவரையும் ஒருமுகமாக பார்க்கும் குணம் கொண்டவனாக இருப்பான். தம்மையே ஈசனாக உருவகப்படுத்தி கொள்பவன்.

எ.கா
யாதும் ஊரே யாவரும் கேளிர்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் .
சித்தன் போக்கு சிவன் போக்கு.

மனிதன் என்பவன் மனதிற்கு கட்டுப்பட்டவன். தமது மனம் எதை நினைக்கிறதோ அதற்க்கு உடன் பட்டு நடப்பவன். சடங்கு,சம்பிரதாயங்களுக்கு உட்பட்டவன். சமுதாயத்தில் பின்னிப்ப்பினைக்கபட்டவன். தாம் உண்டு தம் வேலை உண்டு என்று உள்ளவன். 
எ.கா
    விதிப்படி பயணம்.
    நடப்பதெல்லாம் நன்மைக்கே.

18 comments:

Sairam said...

Balu,I am having few doubts according to your view about manithan. Please clarify...

*****மனிதன் என்பவன் மனதிற்கு கட்டுப்பட்டவன். தமது மனம் எதை நினைக்கிறதோ அதற்க்கு உடன் பட்டு நடப்பவன்.*****

மனிதன் என்பவன் மனசு சொல்லும் கெட்ட விஷயங்களுக்கு கட்டுப்பட்டு நடந்தால் அவன் மிருகம் அல்லவா?

*****சடங்கு,சம்பிரதாயங்களுக்கு உட்பட்டவன்.*****

சடங்கு,சம்பிரதாயங்களை தன் தேவைக்கு ஏற்றார் போல் வகுத்துகொண்டவன்.

*****சமுதாயத்தில் பின்னிப்ப்பினைக்கபட்டவன். தாம் உண்டு தம் வேலை உண்டு என்று உள்ளவன்.*****

சமுதாயத்தில் பின்னிப்பினைகப்பட்டவன் ஒரு போதும் தாம் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க மாட்டன் .

"மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா ?" என்று கவிஞர் வாலி பாடல் எழுதி உள்ளார் .
அப்படி என்றல் மனம் போன போக்கில் போகிறவன் எப்படி மனிதன் ஆகா முடியும் .

("மனதிற்கு கட்டுப்பட்டவன்.தமது மனம் எதை நினைக்கிறதோ அதற்க்கு உடன் பட்டு நடப்பவன்.=மனம் போன போக்கில் போகிறவன்" உங்கள் கூற்றுபடி .)

"விதிப்படி பயணம்."

விதியை தன் மதி கொண்டு வெல்லலாம்.

அப்படி விதியை வென்றவர்கள் .

1 .Thomas Allva Edison.
2.Ambedkar.
3.Subhash Chandra Bose. etc........

More over our parents. Our parents fought against vedhi using their knowledge (mathi) and made us a educated person.

ரொம்ப simple லா சொல்லனும்னா

மன்னிக்கறவன் மனிதன் .
மன்னிப்பு கேட்கிறவன் வீரன்.

Sairam said...

*****சித்தன் என்பவன் எந்தவொரு சடங்கு, சம்பிரதாயங்களுக்கு கட்டுப்பட்டவனாக இருக்கமாட்டான். முற்போக்கு சிந்தனை கொண்டவனாக இருப்பான். இயற்கையை நேசித்து அதனுடன் உறவாடி கொள்பவன். சாதி, மதம் பேதமின்றி அனைவரையும் ஒருமுகமாக பார்க்கும் குணம் கொண்டவனாக இருப்பான்.******

இதுவரை உங்கள் கருத்து சரியே !!!

&&&&&தம்மையே ஈசனாக உருவகப்படுத்தி கொள்பவன்.&&&&&

பாபா ,வள்ளலார் ,ஏசு ,முகமது நபி ,படினத்தார் ,ராமதேவர் ,புத்தர் ,பெரியார் இவர்களில் யாரும் தம்மையே ஈசனாக உருவகப்படுத்தி கொள்ளவிளையே ?????

எ.கா
"யாதும் ஊரே யாவரும் கேளிர்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன். "
இது இரண்டும் பொன் மொழி


சித்தன் போக்கு சிவன் போக்கு.
இது வழி மொழி

தயவு செய்து வழி மொழியை "எ.கா " பயன்படுத்தாதீர் .

Tamil Siddhar Padalgal said...

திரு ஜெயக்குமார் அவர்களே,

சித்தன் போக்கு சிவன் போக்கு.

இது வழி மொழி

தயவு செய்து வழி மொழியை "எ.கா " பயன்படுத்தாதீர்

இதை நான் பழமொழி என்று நினைத்தேன்,ஆனால் இன்று தான் வழி மொழி என்று தெரிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி.

Tamil Siddhar Padalgal said...

திரு ஜெயக்குமார் அவர்களே,

&&&&&தம்மையே ஈசனாக உருவகப்படுத்தி கொள்பவன்.&&&&&

சித்தர் பாடலில் பயன்படுத்தப்படும் ஈசன் என்பது தாங்கள் நினைக்கும் உருவ வழிப்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் சிவலிங்கம் அல்ல. தம்முடைய உடலில் உள்ள பஞ்ச பூதங்களின் தத்துவத்தை உணர்ந்தவர்கள் .


பாபா ,வள்ளலார் ,ஏசு ,முகமது நபி ,படினத்தார் ,ராமதேவர் ,புத்தர் ,பெரியார் இவர்களில் யாரும் தம்மையே ஈசனாக உருவகப்படுத்தி கொள்ளவிளையே ?????

மேற்கூறிய அனைவரும் ஈசத்துவத்தை உணர்ந்தவர்கள். ஆகையால் தான் இன்றும் வரை இவர்கள் கூறிய கருத்துகள் மக்களிடையே பின்பற்றப்படுகிறது. ஈசன் உருவத்தை விளக்குவது எளிதான காரியம் அல்ல. இதைப்பற்றி கூடிய விரைவில் ஒரு கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.

Tamil Siddhar Padalgal said...

திரு ஜெயக்குமார் அவர்களே,

மன்னிக்கறவன் மனிதன் .( மன நலத்தை பொருத்து )
மன்னிப்பு கேட்கிறவன் வீரன். ( சூழ்நிலையை பொருத்து)

அழகான விளக்கம் கொடுத்து உள்ளீர்கள். மிக்க நன்றி.

Muthukumarasamy said...

Bala, Please post some siddhar paadalgal with meaning....

"Natta kallai sutri vandhu naalu pushbam saatthiye,
sutrivandhu munu munu endru sollum mandhram yedhada?
Natta kallum pesumo, naadhan "UL"lirukkaiyil "

Siva vaakiyar

Anonymous said...

ஆன்மிக சுடரொளி திரு பாலா அவர்களே ,
தங்கள் கட்டுரையில் குறிப்பிட்ட படி பார்த்தால் (சித்தன் என்பவன் எந்தவொரு சடங்கு, சம்பிரதாயங்களுக்கு கட்டுப்பட்டவனாக இருக்கமாட்டான்.)அப்படியென்றால் நண்பன் லக்ஷதிபதியும் ஒரு சித்தனா ? தாங்கள் அவனை அறிவிர்கள் என்று நினைக்கேறேன் .
நான் பல முறை அவனை கூர்ந்து கவனித்து இருக்றேன் .ஆனால் அவனிடம் கேட்டால் பிதாமகன் படத்தில் வரும் சித்தன் நான் என்கிறான் .இது சாத்தியமா ? இயற்கைக்கு மாறான அவனது செயல்பாடுகள் சற்று கலக்கம் உண்டாக்கினாலும் அவனது செயல்பாடுகள் பக்கத்தில் இருப்பவர்களை அதிரசெய்கிறது.ஒரு சித்தன், 'தான் சித்தன்' என்பதை ஏன் ஏற்க மறுக்கிறான் ? தன்னடக்கமா ? தலைகனமா ? இல்லை தான்தோன்றிதனமா ..? இதை பேரறிவாளர் நண்பர் லக்ஷதிபதியை சான்றாக வைத்து சற்று விளக்கம் தரவும் .

தங்கள் ஆன்மிக பயணம் தொடர இந்த பக்தனின் வாழ்த்துக்கள் !

-Pushparaj

shanmuga said...

ஆன்மிக சுடரொளி திரு பாலா அவர்களே , (i dont know when u became like that?? and how and why????)
Mele thiru pushparaj avarkal ketta kelvikkanna pathilai thankgal vegu sekirathiril tharumaru kettukolkiren..!

Mikka nandri.. Ungala Anmiga piyanam sirakka valthukkal..

Unknown said...

நான் கடவுள்...

Unknown said...

ஜெயமோகனின் ஏழாவது உலகம் yentha navalli padiunkal சித்தன் என்பவன் year yendru puriyummm.

Anonymous said...

நண்பர் லக்ஷதிபதி எப்போதும் SHORTடா தான் பேசுவார் . ஆனால் அதில் ஆயிரம் அர்த்தங்கள் அங்குமிங்கும் அலைந்துகொண்டேருக்கும் . அவர் சுருக்கமாய் சொன்ன "நான் கடவுள் " என்ற பதிலை அவரை ஓரளவு அறிந்தவன் என்ற வகையில் இந்த சமுதாயத்திற்கு தெளிவு படுத்த இந்த அடியேன் விரும்புகிறேன் .

நண்பர் லக்ஷதிபதி ஒரு சித்தனா அல்லது ஜித்தனா என்பது விவாததிற்குரிய விசயமாய் இருக்கும் நிலையில்,

"நான் கடவுள் " என்ற அவரின் பதில் பார்ப்போர் கண்களுக்கு அவரை ஒரு தலைகனம் பிடித்தவராகவும் , தான்தோன்றி தனமுள்ளவராகவும் உருவகப்படுத்தும். ஆனால் இதில் பொதிந்துள்ள அவரின் தன்னடக்கத்தை , அறிவுரையை , ஆன்மிக ரசத்தை என்னவென்று சொல்வது. இது சித்தர்களுக்கே உரிய சீக்ரெட் வார்த்தை விளையாட்டு என்பது ஆன்மிக சுடரொளி பாலாவின் பக்தகேடிகளுக்கு (மன்னிக்கவும் : பக்தகோடிகளுக்கு) நன்கு தெரியும்.

நாண்பர் லக்ஷதிபதி , "தான் கடவுள் நம்பிக்கை உள்ளவன் " என்பதை தான் இப்படி SHORTடா குறிப்பிடுகிறார். உதாரணத்திற்கு , மாமிசம் உண்பவர்கள் "வெஜிடேரியன்", உண்ணாதவர்கள் "நான் வெஜிடேரியன் ".. இதை சற்று இங்கு பொருத்தி பார்க்கவேண்டும் .

இது போன்ற சில பல புரியாத புதிர் வார்த்தை விளையாட்டுகளால்தான் சின்ன சித்தர் லக்ஷதிபதியின் ஆன்மிக அங்கிகாரம் பெரிய சித்தர் திரு.பாலாவிடம் பஞ்சாயத்துக்கு பலமாய் நிற்கிறது .

தயவு செய்து திரு பாலா அவர்கள் லக்ஷதிபதி ஒரு சித்தனா அல்லது ஜித்தனா என்பதை தெளிவு படுத்தவேண்டும்.

பாலாவின் வாய்மொழி அது சித்தர்களின் முரசொலி என்று கூறி, இந்த கமென்ட் எழுத வாய்ப்பு கொடுத்த அணைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து, இந்த கமெண்டை நிறைவு செய்கிறேன் நன்றி , வணக்கம் . [எல்லோருக்கும் ஒரு கும்பிடு :-) ]

Anonymous said...

மன்னிக்கவும் பிழை நேர்ந்து விட்டது

//மாமிசம் உண்பவர்கள் "நான் வெஜிடேரியன்", உண்ணாதவர்கள் "வெஜிடேரியன்".. இதை சற்று அங்கு பொருத்தி பார்க்கவேண்டும் . // :)

Tamil Siddhar Padalgal said...

அன்பு நண்பர் ராஜ் அவர்களே,

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். நண்பர் லக்ஷதிபதி எப்போதும் SHORTடா தான் பேசுவார்-{ ஏனென்றால் அவனே ஒரு ......... தான் .. புரியும் நினைக்கறேன் }

Muthukumarasamy said...

Bala,

We need an accurate and apt answer, whether Laks is a Siddhar or not?

Also What is the "real" definition of Siddhars....
Nowadays lot of human beings called themselves as Siddhars....

Thanks
MKS

Muthukumarasamy said...

[எல்லோருக்கும் ஒரு கும்பிடு :-) ]

Ippadi paadhiyila "game" a vittuttu ponaa yeppadi Bala Sir ???

Is it your purpose to start this Blog?

MKS

Unknown said...

தேடிச் சோறு நிதந்தின்று-பல சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம் வாடித் துன்பமிக உழன்று-பிறர் வாடப் பலசெயல்கள் செய்து- நரை கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ ?

Unknown said...

i like this madurai

Unknown said...

Sir,very good morning.fortunately,I visited your blog.i have a 7 year old son.he s in a different world.he never mixes with anyone,though he mingles.he s good in reciting slogams,siddhar songs..he never prays to an idol.approaches life philosophically,never listens to anyone.he says nothing s good or bad in this world.he never follows a rule or lifestyle.way different.he stays cool despite in a problematic situation.many r complaining saying that he never replies,shows attitude...bla..bla.now I take him to councilling.any suggestions...plz

Post a Comment